பள்ளிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
பள்ளிபாளையம் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார்.
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் வெப்படை அருகே உள்ள லட்சுமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 24). இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் வெப்படையில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பள்ளிபாளையம் பழைய தபால் நிலைய ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.