அருப்புக்கோட்டையில் துணிகரம்: அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு

அருப்புக்கோட்டையில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறித்துச் சென்ற மோட்டார்சைக்கிள் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-01-21 22:00 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை சிதம்பர நாடார் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகள் பிரேமலதா (வயது 42). இவர் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென்று பிரேமலதாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர் அதே வாலிபர்கள் செல்லும் வழியில் அங்குள்ள ரைஸ் மில் அருகே பெருமாள் என்பவரது மனைவி மகேஸ்வரியிடம் (57) 4½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் நகை பறிப்பு கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்