அடிப்படை வசதிகள் கோரி கோட்டூர் மலை கிராம மக்கள் தர்ணா போராட்டம்
மலைகிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பெல்ரம்பட்டி அருகே உள்ள கோட்டூர்மலை கிராம மக்கள், மாணவ-மாணவிகள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் மலைகிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கிராமமக்கள் கூறுகையில், கோட்டூர் மலைகிராமத்தில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த மலைகிராமத்திற்கு பெல்ரம்பட்டி அல்லது கன்சால்பெயில் பகுதியில் இருந்து சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். எனவே சாலை அமைக்கும் பணியை விரைவாக தொடங்க வேண்டும். எங்கள் மலைகிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் வசதி இல்லை. அங்கு குடிநீர் ஆதாரமாக உள்ள கிணற்றின் மோட்டாரும் பழுதடைந்து உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மலைகிராம மக்களுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.