வேதாரண்யம் அருகே புயலால் சாய்ந்த மரங்களை நவீன கருவி மூலம் தூளாக்கும் பணி அமைச்சர் பார்வையிட்டார்
வேதாரண்யம் அருகே, புயலால் சாய்ந்த மரங்களை நவீன கருவி மூலம் தூளாக்கும் பணியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம், வானவன்மகாதேவி கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் டிராக்டருடன் பொருத்தப்பட்ட நவீன கருவிகள் மூலம் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மரங்கள் மற்றும் தென்னை ஓலைகளை தூளாக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதை தொடர்ந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கஜா புயலினால் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றி விட்டு புதிதாக நடுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். புயலால் சாய்ந்த மரங்களை சிறுதுண்டுகளாக அறுத்து அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கனரக வகை மரம் அறுக்கும் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 205 கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கருவிகள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.85 என்ற அடிப்படையில் குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.
சாய்ந்து விழுந்த தென்னை மரங்களின் மட்டைகள், ஓலைகள் மற்றும் முறிந்த மரக்கிளைகளை தூளாக்கி நிலங்களில் உரமாக பயன்படுத்தலாம். இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் டிராக்டருடன் பொருத்தப்பட்ட தென்னை ஓலைகள் தூளாக்கும் கருவிகள் வாங்கப்பட்டு நாகை மாவட்டத்திற்கு 8 கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிகள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.340 என்ற அடிப்படையில் குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்லக்கண்ணு, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், வெற்றிச்செல்வன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.