ராசிபுரம், சிங்களாந்தபுரத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ராசிபுரம், சிங்களாந்தபுரத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அன்பழகன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சம்பத்குமார், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் ஏ.பி.பழனிவேல், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஆடிட்டர் கே.ஆர்.நல்லியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அ.ம.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். விழாவில் மாவட்ட இணைச்செயலாளர் திலகம், ராசிபுரம் நகர செயலாளர் வி.டி.தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், தேவராஜன், கோபால், சிங்களாந்தபுரம் கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன், அக்ரி நடராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன், பொறியாளர் அணி மாவட்ட செயலாளர் என்ஜினீயர் முத்துசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய அணி செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.
ராசிபுரம் நகர அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா 27 வார்டுகளிலும் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்தவர்களை நகர செயலாளர் வி.டி.தமிழ்செல்வன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சம்பத்குமார், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஏ.பி.பழனிவேல், வர்த்தகர் அணி இணைச் செயலாளர் ஆடிட்டர் கே.ஆர்.நல்லியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் வி.திருப்பதி, மாவட்ட இணைச்செயலாளர் திலகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி வைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம், இனிப்புகளை வழங்கினர். விழாவில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராம்குமார், நகர அவைத்தலைவர் பூபதி, துணை செயலாளர்கள் தியாகராஜன், ஜெயக்குமாரன், வேலுசாமி, பொருளாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதிகள் பாஸ்கரன், செந்தில், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், அக்ரி நடராஜ், பொறியாளர் அணி மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.