நாகையில் மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள்

நாகையில், மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கியது.

Update: 2019-01-18 23:00 GMT
நாகப்பட்டினம்,

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் நீச்சல் போட்டிகள் மற்றும் சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக நேற்று நாகை புதிய கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் இந்த பீச் வாலிபால் போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா தொடங்கி வைத்தார்.

இந்த போட்டிகள் 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் இருந்து 90 அணிகள் கலந்து கொண்டன. மொத்தம் 180 பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாந்தி, திருவாரூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் உள்பட பயிற்சியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று(சனிக்கிழமை) பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார். போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 1,800-ம், 2-ம் பரிசு ரூ.800-ம், 3-ம் பரிசு ரூ.400 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறையினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்