எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2019-01-17 23:46 GMT
உசிலம்பட்டி,

உசிலம்பட்டி நகர் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, தேவர் சிலை முன்பு கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் பூமா ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், முன்னாள் ஒன்றிய தலைவர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழக்கினார். விழாவில் முன்னாள் நகர செயலாளர் ராமநாதன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் லட்சம், உக்கிரபாண்டி, கூட்டுறவு கடன் சங்க தலைவர் வில்லாணி ராஜா, ஒன்றிய பேரவை மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், நகர் பேரவை ரத்தினமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். செல்லம்பட்டியில் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அ.ம.மு.க. சார்பில் உசிலம்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் குணசேகரபாண்டியன், ஒன்றிய செயலாளர் வக்கீல் சேதுராமன், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.டி.ராஜா, தொழிற்சங்க செயலாளர் பிச்சை, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காக்கிராஜா, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் முத்துவீரம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் சேடபட்டியை அடுத்த பெருங்காமநல்லூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஒன்றிய செயலாளர் துரை தனராஜன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சந்திரன், கூத்தியார்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நிலையூர் முருகன், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், அவைத்தலைவர் ராசு ஆகியோர் கிரிவல பாதையில் சரவண பொய்கைக்கு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல திருநகர் மகாலட்சுமி காலனியில் வட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் கடை வீதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருப்பட்டி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி தலைமையில் நகர செயலாளர்கள் கணேசன், பாப்புரெட்டி, ஒன்றிய பொருளாளர் தங்கப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கொடிமங்கலம் கிராமத்தில் கிளைச் செயலாளர் கருப்பணன் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் பேரூர் செயலாளர் பாப்புரெட்டி தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேரூர் துணை செயலாளர் சந்தனதுரை, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்து கண்ணன், பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் கார்த்திக், நகர பொருளாளர் கோட்டையன், கூட்டுறவு வங்கி தலைவர் துரைநடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சந்தைவாசல் அருகில் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு மன்ற தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் நவநீதகிருஷ்ணன், கவிஞர் பொன்கலைதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு வர்த்தகர் சங்க தலைவர் துரை பாலச்சந்திரன் இனிப்பு வழங்கினார். இதேபோல் மேட்டுநீரேத்தானில் செயலாளர்கள் சதீஸ்வரன், மருதமுத்து தலைமை யில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்