பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

எம்.ஜி.ஆர்.பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2019-01-17 23:15 GMT
நாகர்கோவில்,

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், அவை தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் ராஜன், பொருளாளர் திலக், நகர செயலாளர் ஜெயசந்திரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், சி.என்.ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் நாஞ்சில் சந்திரன், லதா ராமசந்திரன் உள்பட திரளானோர் பங்கேற்று எம்.ஜிஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதே போல ச.ம.க. சார்பிலும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். நகர செயலாளர் ஜெயகுமார், புளியடி பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுபோன்று குமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அ.ம.மு.க.) சார்பில் மாவட்ட செயலாளர் பச்சைமால் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அஞ்சுகிராமத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சி.என்.ராஜதுரை கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மருங்கூரில் நடந்த விழாவிற்கு பேரூர் அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்