எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அரக்கோணம்,
அரக்கோணம் நகர அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது. நகர அ.தி.மு.க. செயலாளர் கே.பி.பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், நகர அவைத்தலைவர் சி.காமராஜ், நகர பொருளாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாசறை துணைத்தலைவர் என்.ஷியாம்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சு.ரவி கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் செல்வம், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத்தலைவர் ஆட்டுப்பாக்கம் ஏ.வி.ரகு, நகர பாசறை துணைத்தலைவர் கி.சரவணன், வட்ட செயலாளர் பாண்டியன், ஏ.எல்.நாகராஜன் உள்பட கட்சியின் அனைத்துதரப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆம்பூர் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு பஜாரில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்தை வைத்து நகர செயலாளர் எம்.மதியழகன் தலைமையில், அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.
விழாவில் அரசு வழக்கறிஞர் ஜி.ஏ.டில்லிபாபு, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆர்.வெங்கடேசன், கூட்டுறவு சங்க தலைவர் எம்.அஞ்சான், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நகரில் உள்ள 36 வார்டுகளிலும் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாதனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அமைச்சர் கே.சி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய அவைத்தலைவர் ரத்தினம், துணை செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அன்பரசன், ராமமூர்த்திராஜா, வில்வநாதன், சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் ய.செ.சமரசன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பாண்டுரங்கன், ஆர்.வடிவேல், மாவட்ட துணை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ஏ.கஸ்பாவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாநில செய்தி தொடர்பாளர் சிவக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேரணாம்பட்டு நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு நகர செயலாளர் எல்.சீனிவாசன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட இணை செயலாளர் சந்திராசேட்டு, ஒன்றிய செயலாளர் சி.வி.வெங்கடேசன், நகர துணை செயலாளர் சிவாஜி, பொருளாளர் ஜெயக்குமார், பேரவை செயலாளர் தேசமுத்து, மாவட்ட பிரதிநிதி திருமால், முத்து சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பேரணாம்பட்டு ஒன்றியம் பொகளூர், ஏரிகுத்தி, கொத்தபல்லி, பல்லலகுப்பம், கார்கூர் ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். இதில் இன்பரசன், ஜெகதீசன், கஜேந்திரன், பாஸ்கரன், சோக்கன், தேசியமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தேவலாபுரம் ஊராட்சியில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தேவலாபுரம் ஈ.வெங்கடேசன் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஊராட்சி செயலாளர் மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நித்தியானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில், அ.தி.மு.க.வினர் டவுன் போலீஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், அவைத்தலைவர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம் வரவேற்றார். வார்டு செயலாளர் பட்டாசு குமார், கந்திலி ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஆர்.ஆறுமுகம், தம்பாகிருஷ்ணன், பழனிசாமி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மாடப்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு ஆகிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் சி.செல்வம் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி, அவைத்தலைவர் சின்னப் பையன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஏ.டி.கருணாகரன், டி.வி.சிவன், சி.செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பக்தவச்சலம் நன்றி கூறினார்.
திருப்பத்தூர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் ஏ.கே.சி.சுந்தரவேல் தலைமையில், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் சகாதேவன், அட்சயா முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர பொருளாளர் சலீம் நன்றி கூறினார்.
தீபா பேரவை சார்பில், திருப்பத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் ஜி.ராஜா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
சோளிங்கர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சோளிங்கர் பெருமாள் கோவிலில் இருந்து நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஊர்வலமாக பஸ் நிலையம் வரை சென்றனர். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சி.கோபால் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வில்பிரட் ஜெயக்குமார், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தமிழரசி, கூட்டுறவு சங்க தலைவர்கள் தாமோதரன், ராமலிங்கம், நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் வேலு, சுரேஷ், வக்கீல்கள் தமிழ்ச்செல்வன், பிரபு, பாஸ்கர், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சுரேஷ், சரவணன், மதன், தட்சணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு காலண்டர், வேட்டி, சட்டை வழங்கப்பட்டது.