கடலூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
கடலூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கடலூர்,
அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், மறைந்த முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. சார்பில் கடலூர் நகர செயலாளர் குமரன் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் முருகுமணி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் சீனுவாசராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் சேவல்குமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தொகுதி துணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜெ.கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் மணி, அன்பு, தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் கடலூர் செம்மண்டலத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவுக்கு மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கணேசன், தலைமை கழக பேச்சாளர் சந்திரகாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை.அன்பரசன், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் கவுன்சிலர்கள் சேகர், லட்சுமி குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாகிருஷ்ணன், முத்துகுமாரசாமி, வக்கீல் வினோத், வார்டு பிரதிநிதிகள் ரமேஷ், முத்து, செல்வம், சிலம்பு, லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கம்மியம்பேட்டையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சேவல்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் வார்டு செயலாளர் எத்திராஜ், முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வன், ராமையா, பன்னீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் தங்க.வினோத்ராஜ் தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கழக மருத்துவ அணி மாநில துணை செயலாளர் ராஜா பழனிவேல் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் கலைமாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பாஷா, நகர கழக அவைத்தலைவர் சேகர், பொருளாளர் சக்திவேல், நகர துணைச்செயலாளர்கள் சீனு, சலீம் மற்றும் ராபின், சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மஞ்சக்குப்பம் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர்(பொறுப்பு) ஓ.எல்.பெரியசாமி தலைமை தாங்கி மாலை அணிவித்தார். மாவட்ட துணைச்செயலாளர் ஏ.ஜி.ரஜினி மூர்த்தி, நகர இணைச்செயலாளர் இனியன், நகர இளைஞர் அணி செயலாளர் ராமு, துணைச்செயலாளர் சீனு, இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றிய இணைச்செயலாளர் கிருஷ்ணராஜ், துணைச்செயலாளர் சுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் அறிவழகன், ஆட்டோராஜா, ரஜினி அறிவு, ராஜேஷ், செந்தில்குமார், பாபாசரவணன், தீப்பொறி கதிரவன், அன்பு, மனோகர், ரகுநாத், தியாகராஜன், ரஜினிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்தார். துணைச்செயலாளர் சதீஷ், நகர நிர்வாகிகள் பிரபாகரன், நாகராஜ், குறிஞ்சிப்பாடி ஒன்றிய நிர்வாகிகள் தங்கதணிகாசலம், பாலு, காசிநாதன், சீத்தாராமன், கவுதமன் மற்றும் ஆறுமுகம், பாலு, வைத்தி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.