காணும் பொங்கல் விழா பழவேற்காடு, மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கல் விழாவையொட்டி பழவேற்காடு, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பொன்னேரி,
பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் அழகிய நீண்ட கடற்கரை இந்தியாவில் 2-வது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக உள்ளது. இங்கு பறவைகள் சரணாலயம் இயற்கையாகவே அமைந்துள்ளது. தமிழக அரசு பழவேற்காட்டை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்து வந்த நிலையில் படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவத்தால் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆண்டு தோறும் காணும் பொங்கலையொட்டி பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு கூடுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி தலைமையில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர்.
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
கடற்கரை மணலில் உற்சாகமாக நடந்து சென்று பொழுதை கழித்தனர். கடலில் குளிக்க தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தடுப்புகளை தாண்டி கடலில் நின்று பலரும் பொழுதை கழித்தனர். கடலில் குளிக்க போலீசார் விதித்த தடையை மீறி தடுப்புகளை தாண்டி ஆபத்தை உணராமல் பலர் கடலில் குளித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக படகுடன் கூடிய நீச்சல் படை வீரர்கள் கடற்கரையில் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
கடற்கரையில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு அவ்வப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை கடலில் குளிக்க வேண்டாம், விழிப்புடன் இருக்கவேண்டும் என்று எச்சரித்து கொண்டிருந்தனர்.
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் நிறுத்தப்பட்டன. மாமல்லபுரம் புறவழிச்சாலையில் இருந்து நகருக்குள் வர மினி பஸ்கள் இயக்கப்பட்டன. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மாமல்லபுரம் நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக அரசு பிளாஸ்டிக்கை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இளநீர் வியாபாரி ஒருவர் அர்ச்சுனன் தபசு அருகில் சுற்றுலா வந்த பயணிகளிடம் விற்ற இளநீரில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழலுக்கு பதில் பப்பாளி இலை தண்டில் உள்ள குழலை இளநீர் குடிக்க உறிஞ்சு குழலாக வழங்கி நூதன வியாபாரத்தில் ஈடுபட்டார். அந்த இளநீர் வியாபாரியை பேரூராட்சி நிர்வாக அதிகாரி கேசவன் மற்றும் துப்புரவு அதிகாரிகள் பாராட்டிவிட்டு சென்றனர்.