குடும்ப தகராறில் விபரீதம் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மனைவியை மிரட்ட திராவகம் குடித்த போலீஸ்காரர்

குடும்பத் தகராறில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தனது மனைவியை மிரட்ட போலீஸ்காரர் ஒருவர் திராவகம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-01-11 22:45 GMT

மதுரை,

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவருக்கும், திண்டுக்கல்லில் போலீஸ்காரராக பணியாற்றும் ஒருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் இருவரும் தந்தையான போலீஸ்காரருடன் திண்டுக்கல்லில் தங்கி உள்ளனர். சம்பவத்தன்று ஊருக்கு வந்திருந்த போலீஸ்காரருக்கும், அவரது மனைவியான இன்ஸ்பெக்டருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் மனைவியை மிரட்டுவதற்காக போலீஸ்காரர் வீட்டில் இருந்த திராவகத்தை குடித்துள்ளார். பின்னர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். போலீஸ் தம்பதிக்கிடையே நடந்த இந்த தகராறு போலீஸ் வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்