திண்டுக்கல்-கோவை, திருச்செந்தூர் உள்பட 23 ஊர்களுக்கு புதிய பஸ்கள்
திண்டுக்கல்-கோவை, திருச்செந்தூர் உள்பட 23 ஊர்களுக்கு புதிய பஸ்களின் சேவையை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்துக்கு புதிதாக பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மண்டலத் துக்கு 23 புதிய பஸ்கள் வழங் கப்பட்டுள்ளன. இந்த புதிய பஸ்கள் திண்டுக்கல்லில் இருந்து திருச்செந்தூர், மார்த் தாண்டம், கோவை, கன்னியா குமரி, கொடைக்கானல், கம்பம், குமுளி, போடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக் கப்படுகின்றன.
இதற்கான தொடக்க விழா, திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் நேற்று நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி, புதிய பஸ்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல பொதுமேலாளர் ராஜேஷ்வரன், மாநகராட்சி கமிஷனர் மனோகர், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் மருதராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல செய லாளர் நாராயணசாமி, நிர் வாக பணியாளர் செயலாளர் சங்கர்பிரகாஷ், துணை செய லாளர் ராஜா (புதுப்பிக்கும் பிரிவு) மற்றும் நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண் டனர். இதையடுத்து அமைச் சர், நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை தடுக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய் வோம். அமைச்சர் பால கிருஷ்ணா ரெட்டி வழக்கில் சட்டம் தனது கடமையை செய் துள்ளது. இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க.வுக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு, தி.மு.க. மட்டுமே எதிர்க் கட்சி. பிற கட்சிகளை நாங்கள் போட்டியாக நினைக்க வில்லை. இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிக்க இருந்த நேரத்தில், தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டது. பா.ஜனதாவுக்கு நாங்கள் துதிபாட வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மத்திய அரசு, நாங்கள் மாநில அரசு. கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட நிவாரணத்தை மத்திய அரசு தரவில்லை. அதை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு இவர் கூறினார்.