வானவில்: பற்பல தகவல்கள் தரும் ஹானர் ஸ்மார்ட் வாட்ச்
ஸ்மார்ட் வாட்ச்கள் வரிசையில் புதிதாக இடம்பெற்றுள்ளது ஹானர் வாட்ச். இதன் செயலியை நமது செல்போனுடன் இணைத்துக் கொண்டால் நாம் பல தகவல்களை இதிலிருந்து பெற முடியும்.
இந்த வாட்சை அணிந்து கொண்டு உறங்கும் போது நமது தூக்கத்தின் அளவை முழுமையாக கண்டறிந்து நமது செல்போனுக்கு தகவல் அனுப்புகிறது.
நாம் தூங்கக்கூடிய நேரம், ஆழ்ந்த தூக்கத்தில் எவ்வளவு நேரம் இருக்கிறோம், அதிகமாக கனவு காண்கிறோமா, இன்சோம்னியா என்கிற தூக்க குறைபாடு நோய் நமக்கு இருக்கிறதா என்பன போன்ற சகல விதமான விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம்.
நமது இருதய துடிப்பின் நுட்பங்களையும், அகச்சிவப்பு தொழில்நுட்பத்தை கொண்டு நமக்கு தெரியப்படுத்துகிறது இந்த வாட்ச்.
இதயம் வழக்கத்தில் இருந்து மாறுபட்டு துடிக்கும் போது எச்சரிக்கையும் செய்கிறது. நீச்சல் பயிற்சி செய்யும் போது நீந்தும் வேகம், தூரம், எரிக்கப்பட்ட கலோரிகளின் அளவு ஆகியவற்றையும் திரையில் காட்டுகிறது. 50 மீட்டர் ஆழம் வரை தண்ணீரில் இதனை அணிந்து கொண்டு நீந்தலாம்.
இந்த வாட்சை அணிந்திருக்கும் போது நமது போனுக்கு அழைப்புகள் வந்தாலும் வாட்சிலேயே அவற்றை ஏற்கவோ மறுக்கவோ முடியும். நமது போனில் புகைப்படம் எடுக்க விரும்பினால் இந்த வாட்சை ஒரு ரிமோட் போல உபயோகித்து போட்டோ எடுக்கலாம்.
குறிப்பாக செல்பி எடுக்கும் போது மிகவும் வசதியாக இருக்கும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 17 மணி நேரம் வரை நீடித்து உழைக்கும். கருப்பு, நீலம், பிங்க் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது இந்த ஹானர் 4 வாட்ச்.
ஒரு வருட வாரண்ட்டியும் தருகின்றனர். ஆப்பிள் வாட்ச்க்கு நிகரான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இந்த வாட்சின் விலை 2,599 ரூபாய் மட்டுமே.