பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் முறைகேடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் முறைகேடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ,1,000 வழங்க வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த வினியோகம் பொங்கலுக்கு முன்பு வரை நடைபெறும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் செயல்படும். பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு பெறுவதற்கு வருகிற வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175–233063 அல்லது தாலுகா அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பின்வரும் கண்காணிப்பு அலுவலர்களின் கைப்பேசி எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம். அதன் விவரம் வருமாறு:–
செய்யாறு – உதவி கலெக்டர் –94450 00419, திருவண்ணாமலை உதவி கலெக்டர் – 94450 00420, ஆரணி – உதவி கலெக்டர்– 90253 13980, போளுர் –மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் –94450 00193, செங்கம்–மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் –94444 84765, ஜமுனாமரத்தூர்– பழங்குடியினர் நல திட்டஅலுவலர் –90951 90259, வந்தவாசி– மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் –94454 77829, கலசபாக்கம்– கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்)–94426 71105, வெம்பாக்கம்– ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) செய்யாறு கோட்டம்– 74029 03703, கீழ்பென்னாத்தூர் –ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) திருவண்ணாமலை கோட்டம் –74026 06611, சேத்துப்பட்டு –உதவி ஆணையர் (கலால்)–94886 79924, தண்டராம்பட்டு –ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) திருவண்ணாலை கோட்டம் –74026 06612.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.