கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் 10 பேருக்கு ‘தினத்தந்தி’ கல்வி நிதி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. படித்த 10 மாணவ-மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’ கல்வி நிதியை கலெக்டர் அன்புசெல்வன் நாளை (செவ்வாய்க்கிழமை) வழங்குகிறார்.

Update: 2019-01-06 23:30 GMT
கடலூர், 

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து வரும் ‘தினத்தந்தி’, மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2014-2015-ம் கல்வி ஆண்டு முதல், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ-மாணவிகளின் மேல்படிப்புக்கு உதவுவதற்காக ‘தினத்தந்தி’ கல்வி நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் படித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு மாவட்டத்துக்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 34 மாவட்டங்களை சேர்ந்த 340 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் கல்வி நிதியாக வழங்கப்படுகிறது.

இதன்படி கடந்த 2017- 2018-ம் கல்வி ஆண்டிற்கான ‘தினத்தந்தி’ கல்வி நிதியாக ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற தகுதி பெற்றுள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவ- மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

1. ஜெ.துவாரகா, சத்ய சாய் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, பாசார்

2. டி.சிவப்பிரகாசம், மங்கலம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, மேல்புவனகிரி

3. எம்.ஸ்ரீவள்ளி, கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, கடலூர்

4. ஆர். பரணி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்

5. ஜெ.ஜெயஸ்ரீ, பாத்திமா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, வடலூர்

6. ஆர்.தர்ஷினி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்

7. எஸ்.அகத்தியா, டி.ஜி.எம். மேல்நிலைப்பள்ளி, சேத்தியாத்தோப்பு

8. வி.லோகநாயகி, சந்திரா மேல்நிலைப்பள்ளி, சேத்தியாத்தோப்பு

9. பி.அனுப்பிரியா, ஸ்ரீஅருணாசலா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, புவனகிரி

10. வி.நிவேதா, எஸ்.டி. ஈடன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, வடலூர்

இந்த 10 மாணவ-மாணவிகளுக்கும் ‘தினத்தந்தி கல்வி நிதி’ வழங்கும் விழா வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதி வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தொடக்கமாக கடலூர் தினத்தந்தி மேலாளர் பி.பால்துரைசிங் வரவேற்று பேசுகிறார். விழாவில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்