ராதாபுரம் தாலுகாவில் கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ராதாபுரம் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராதாபுரம்,
ராதாபுரம் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ராதாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர் பாதுகாப்பு திட்டம்
தமிழ்நாடு அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2018-2019 ஆம் ஆண்டிற்கு ராதாபுரம் தாலுகாவில் இருந்து கல்வி உதவி தொகை கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில் பயிற்சி, பல் தொழில்நுட்ப பயிற்சி, கவின் கலை, ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பட்டப்படிப்பு, இளங்கலை மற்றும் இளமறிவியல், முதுகலை மற்றும் முதுவறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல், தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள், முதுநிலை தொழில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆகியோர் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
25-ந் தேதிக்குள்...
இவர்கள் உரிய படிவத்தில் மனுவுடன் சாதிச்சான்று, கல்விச்சான்று, உழவர் அட்டை நகல், கணக்கெடுப்பு பதிவேட்டின் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வருகிற 25-ந் தேதிக்குள் ராதாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாருக்கு விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.