நாகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000-பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்
நாகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
நாகப்பட்டினம்,
நாகை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000- சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி, பேசினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், பாரதி, ராதாகிருஷ்ணன், நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் (பொறுப்பு), துணைப்பதிவாளர்கள் கனகசபாபதி, பாத்திமா சுல்தானா, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், நாகை தாசில்தார் இளங்கோவன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்ககதிரவன், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.