தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது மாயமான 7 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புவார்கள் மந்திரி ஜெயமாலா நம்பிக்கை

மாயமான 7 மீனவர்களையும் தேடும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது, எனவேவிரைவில் அவர்கள் பத்திரமாக கரை திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மந்திரி ஜெயமாலா தெரிவித்தார்.

Update: 2019-01-05 22:30 GMT
பெங்களூரு, 

மாயமான 7 மீனவர்களையும் தேடும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது, எனவேவிரைவில் அவர்கள் பத்திரமாக கரை திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மந்திரி ஜெயமாலா தெரிவித்தார்.

ஜெயமாலா பேட்டி

கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை மந்திரி ஜெயமாலா நேற்று உடுப்பியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உடுப்பி மல்பே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி 7 மீனவர்கள் மராட்டியம்-கோவா எல்லைப் பகுதியில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் டிசம்பர் 15-ந்தேதி முதல் அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை. மாயமான அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த தேடுதல் பணியில் கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

பத்திரமாக கரை திரும்புவார்கள்

எனவே மாயமான மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் உயிருடன் இருப்பார்கள். அவர்கள் பத்திரமாக கரை திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.ஆகவே மற்ற மீனவர்கள் இந்த விவகாரத்தில் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

இதுதொடர்பாக மீனவர்கள் நாளை (அதாவது இன்று) போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மாயமானவர்களை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மீனவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்