காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நாகையில், நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் காயாம்பு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அருள்பிரகாசம் கலந்துகொண்டு பேசினார்.
கிராமப்புற உட்பிரிவு பட்டா மாறுதல் தற்போது உள்ள நடைமுறையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். நகராட்சி சார் ஆய்வாளர் நிலையில் முழுபுலம் பட்டா மாறுதல் வழங்கும் நடைமுறையை செயல்படுத்துதல், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பணிகளை மீண்டும் வழங்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும்.
நில அளவர் மற்றும் புல உதவியாளர் காலிப்பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். நவீன நில அளவை திட்ட பணிகளில் ஆய்வாளர் தலைமையில் ஊதிய பட்டியல் வழங்கும் அதிகாரத்துடன் தனி அலுவலகம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நில அளவை அலுவலர் சரக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் மனோஜ்குமார் நன்றி கூறினார்.