சாத்தான்குளம் அருகே பரிதாபம் குளத்தில் மூழ்கி மாணவன் சாவு

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2019-01-05 21:30 GMT
சாத்தான்குளம், 

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

7-ம் வகுப்பு மாணவன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரட்டைகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமாடன். விவசாயி. இவருடைய மகன் மாயாண்டி (வயது 13). இவன் பக்கத்து ஊரான கொம்பன்குளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று பள்ளிக்கூட விடுமுறை என்பதால், மாலையில் மாயாண்டி தனது ஊரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதியில் மாயாண்டி மூழ்கினான். நீண்ட நேரமாகியும் மாயாண்டியை காணாததால், அவனை குடும்பத்தினர் தேடினர். அப்போது மாயாண்டி குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவனது உடலை பொதுமக்கள் மீட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குளத்தில் மூழ்கி இறந்த மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த மாயாண்டியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்