தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Update: 2019-01-05 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

புயல்

தாய்லாந்து வளைகுடாவில் உருவாகி உள்ள பபுக் புயல், அந்தமான் கடற்கரையை கடக்க உள்ளது. இதனால் அந்த கடல் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்பின்னர் புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரை நோக்கி சென்று நாளை (திங்கட்கிழமை) அல்லது 8-ந்தேதி வலு இழக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்தமான் கடல், கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

2-ம் எண் எச்சரிக்கை கூண்டு

இதனையடுத்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கும் வகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்