நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொது வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் வருகிற 8, 9–ந் தேதிகளில் தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் குமரி மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தொலைத்தொடர்பு ஊழியர் சங்க தேசிய கூட்டமைப்பு, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம், தேசிய கூட்டமைப்பு தொலைத்தொடர்பு அமைப்பு ஆகியவை பங்கேற்கின்றன. இந்த பொது வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தொலைத்தொடர்பு ஊழியர் தேசிய கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் லெட்சுமண பெருமாள் விளக்க உரையாற்றினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ, தேசிய கூட்டமைப்பு தொலைத்தொடர்பு அமைப்பை சேர்ந்த அச்சுதானந்த் மற்றும் ராஜேந்திரன், செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் சுயம்புலிங்கம், ஆன்றனி மிக்கேல், சின்னத்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.