கீரம்பூர் அருகே, பஸ் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர், மனைவி பலி

கீரம்பூர் அருகே, மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் மனைவியுடன் பலியானார்.

Update: 2019-01-04 21:30 GMT
பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம் லத்துவாடி அருகே உள்ள கீழ்ஈச்சவாரியைச் சேர்ந்தவர் மாரப்பன்(வயது 70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி எட்டம்மாள்(62). இருவரும் நேற்று கீரம்பூரில் உள்ள மகள் புஷ்பாவை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றனர். கீரம்பூர் 4-ரோடு அருகே வந்தபோது நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த தனியார் பஸ் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாமக்கல் அருகே உள்ள திட்டமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ரஞ்சித் குமாரை(32) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்