லாலாபேட்டை அருகே லாரி மோதி டிரைவர் பலி

லாலாபேட்டை அருகே லாரி மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-04 22:15 GMT
லாலாபேட்டை,

திருவாரூர் அருகே மன்னார்குடியை சேர்ந்தவர் ஜெயசீலன்(வயது 23). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை கரூரிலிருந்து மன்னார்குடிக்கு ஜல்லிக்கற்களை லாரியில் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். லாலாபேட்டை அருகே மகாதானபுரம் என்ற இடத்தில் சென்றபோது லாரி திடீரென பழுதாகி நின்றது.

இதனால் லாரியில் இருந்து இறங்கிய ஜெயசீலன், சாலையோரம் நின்றவாறு லாரி பழுதானது குறித்து தனது செல்போனில் பேசிகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமி(51) என்பவர் சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஜெயசீலன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஜெயசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் பழனிசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்