விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது.

Update: 2019-01-04 22:00 GMT
விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது.

மாட்டு வண்டி போட்டி

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி கல்குமி கிராமத்தில் மாட்டு வண்டி போட்டி நேற்று காலையில் நடந்தது. சிங்கிலிபட்டி-விளாத்திகுளம் ரோட்டில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. 10 கிலோ மீட்டர் பந்தய தூரம் கொண்ட பெரிய மாட்டு வண்டி போட்டியில் 8 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுளம் வீரமுனியசாமி மாட்டு வண்டி முதலிடமும், நெல்லை மாவட்டம் வேளாளங்குளம் கண்ணன் மாட்டு வண்டி 2-வது இடமும், சிங்கிலிபட்டி சித்தர் சங்குசாமி மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.

பின்னர் 6 கி.மீ. பந்தய தூரம் கொண்ட சிறிய மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் 13 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் விளாத்திகுளம் அருகே துவரந்தை மணிமேகலை மாட்டு வண்டி முதலிடமும், சிங்கிலிபட்டி அஜித்குமார் மாட்டு வண்டி 2-வது இடமும், கம்பத்துபட்டி பால்பாண்டி மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.

பரிசளிப்பு

பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. பெரிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்து 260, 2-வது பரிசாக ரூ.13 ஆயிரத்து 260, 3-வது பரிசாக ரூ.11 ஆயிரத்து 260 வழங்கப்பட்டது.

சிறிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரத்து 260, 2-வது பரிசாக ரூ.8 ஆயிரத்து 260, 3-வது பரிசாக ரூ.6 ஆயிரத்து 260 வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்