கணக்கில் வராத சொத்துகள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் வருமான வரி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை
கணக்கில் வராத சொத்துகள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு,
கணக்கில் வராத சொத்துகள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம் அளித்தனர்
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது வீடு, அலுவலகம் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, அதிகளவுக்கு கணக்கில் வராத சொத்துகள் சிக்கியது. இது தொடர்பாக மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட குடும்பத்தினர் ஏற்கனவே வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
மந்திரியிடம் விசாரணை
இந்த நிலையில் வருமான வரித்துறை நோட்டீஸ் அடிப்படையில், மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று பெங்களூரு கப்பன் பார்க் அருகே உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
மதியம் சுமார் 2 மணிக்கு ஆஜராகிய அவரிடம் மாலை 5 மணி வரை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
முழு ஒத்துழைப்பு
விசாரணைக்கு பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. வருமான வரித்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.