விளாத்திகுளத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் படைப்புழு தாக்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
படைப்புழு தாக்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விளாத்திகுளத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம்,
படைப்புழு தாக்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விளாத்திகுளத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் தலைமை தாங்கினார். படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் ஜெயக்குமார், சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நகர செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட அவை தலைவர் பெருமாள், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், குறிஞ்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் புவிராஜ், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் பிச்சையா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ரெஸ்லின், காங்கிரஸ் செல்வகுமார் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கோஷம்
அவர்கள், படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை கையில் ஏந்தி, கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசனிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.