கால்நடை சந்தைகள் வழக்கம் போல செயல்படும் மாவட்ட நிர்வாகம் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் வழக்கம் போல செயல் படும்.
கிருஷ்ணகிரி,
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும், கால்நடைகளுக்கு கோமாரி தொற்று நோய் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளான ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒரப்பம், குந்தாரப்பள்ளி, பாகலூர், கெலமங்கலம் ஆகிய 6 கால்நடை சந்தைகள் உள்ளன.
இந்த சந்தைகளுக்கு கோமாரி நோய் தாக்கப்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்பதாலும், தொற்று நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டும், மாவட்டத்தில் உள்ள 6 கால்நடை சந்தைககள் கடந்த டிசம்பர் வரை மூடப்பட்டன.
இந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை சந்தைகளும், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் வழக்கம்போல் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.