பள்ளிக்கு அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்

பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நேற்று அடிப்படை வசதிகள் கேட்டு, பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-02 22:30 GMT
கரூர்,

கரூர் வேடிச்சிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நேற்று அடிப்படை வசதிகள் கேட்டு, பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல், வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கோரிக்கைகள் குறித்து கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைகல்வி அதிகாரி உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்