அந்தேரியில் ரெயில் முன் பாய்ந்து இசை கலைஞர் தற்கொலை
அந்தேரியில் ரெயில் முன் பாய்ந்து இசை கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
மும்பை தகிசர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது40). இசை தட்டு(டி.ஜே.) இயக்கும் கலைஞர். இவர் சம்பவத்தன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அந்தேரி வந்தார். பின்னர் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அந்தேரி - ஜோகேஸ்வரி ரெயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து அங்கு சென்ற ரெயில்வே போலீசார் 2 துண்டாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்து 2 செல்போன்கள், ஒரு கடிதத்தை மீட்டனர். அதன் மூலம் பிணமாக மீட்கப்பட்டவர் ராகேஷ் என்பது தெரியவந்தது. இவர் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து உள்ளார்.
தண்டவாளத்தில் எடுக்கப்பட்ட கடிதத்தில் அவர், தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.