ஆவின் பால் பொருட்கள் தொழிற்சாலையில் 150 தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

செங்கம் பகுதியை சேர்ந்த ஆவின் பால் பவுடர் தொழிற்சாலை தினக்கூலி பணியாளர்கள் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தங் களை பணிநிரந்தரம் செய்யக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2018-12-31 22:45 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நேற்று பொது மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வரு வாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக் கைகள் குறித்து அவரிடம் மனு அளித்தனர்.

முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள், ரேஷன் அட்டை உள்பட 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப் பட்டது.

அந்த மனுக்களை சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

செங்கம் எறையூர் கிரா மத்தில் அம்மாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பவுடர் தொழிற்சாலை தினக் கூலி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித் தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அம்மாபாளையத்தில் இயங்கி வரும் பால் பொருட் கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் சுற்று வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து மொத்தம் 150 பேர் பணி செய்து வருகிறோம். அனை வரும் தினக்கூலி அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இதில் பட்ட தாரிகளும் அடங்குவர்.

கடந்த 24-ந் தேதி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலம் தனியாரிடம் ஒப்பந்தம் விடுவதாக முடி வெடுத்து உள்ளனர். இதனால் 150 குடும்பங்களின் வாழ் வாதாரம் ஒப்பந்ததாரர்கள் வந்தால் பாதிக்கப்படும். நாங்கள் வசிக்கும் பகுதியில் வேறு எங்கும் வேலை வாய்ப்பு இல்லை. எனவே ஒப்பந்த அறிவிப்பை நிறுத்தி எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வருகிற 10-ந் தேதியன்று ஒப்பந்ததாரர் களின் டெண்டர் முடிவாகும். அதற்குள் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் தொழிற்சாலை முன்பு வருகிற 8-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கிராம சுயாட்சி குழுவின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் “மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை தாலுகா அளவிலான விவசாயி கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும். இந்த மாதத்திற் கான முதல் செவ்வாய்க் கிழமை விடுமுறை என்பதால் 2-ம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்த வேண்டும். இதில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செய்யாறு, கலசை வட்டாரங்களில் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு பதில் வழங்க வேண்டும். மனுக்களுக்கு ஒப்புதல் ரசீதும் தர வேண்டும்” என்று தெரிவித்து இருந்தனர்.

மேலும் செய்திகள்