திருவான்மியூரில் வாலிபர் படுகொலை; சாக்கடையில் உடல் வீச்சு பழிக்குப்பழியாக நடந்ததா? போலீஸ் விசாரணை
சென்னை திருவான்மியூரில் வாலிபரை கொன்று உடலை பாதாள சாக்கடையில் மர்மநபர்கள் வீசிச்சென்றனர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாறு,
சென்னை திருவான்மியூர் ரங்கராஜபுரம் கெனால் பேங்க் சாலையை சேர்ந்தவர் கந்தன் என்ற கந்தகுமார் (வயது 28). கடந்த 2010-ம் ஆண்டு இதே பகுதியில் நடந்த சின்னய்யா என்பவர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் மயிலாப்பூரில் தனது தாயாருடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கந்தன் வந்தார். நேற்று மாலை கெனால் பேங்க் சாலையில் வசிக்கும் கந்தனின் உறவினர் ஒருவரின் செல்போனுக்கு தொடர்புகொண்ட மர்மநபர், கந்தனை கொலை செய்து உங்கள் பகுதியில் போட்டுள்ளோம். முடிந்தால் தேடி உடலை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கந்தனை பல இடங்களில் தேடி பார்த்தனர். பூண்டி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பாதாள சாக்கடையின் மூடி வழக்கத்துக்கு மாறாக சிறிது திறந்து இருந்தது. அதை முழுவதும் திறந்து பார்த்தபோது, அதில், தலை, கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் கந்தனின் உடல் கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சின்னய்யா கொலைக்கு பழிக்குப்பழியாக கந்தன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சின்னய்யாவின் இரட்டை மகன்கள் சதீஷ், சந்தோஷை தேடி வருகின்றனர்.
மேலும், அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 3 மோட்டார் சைக்கிளில் 9 வாலிபர்கள் மற்றும் ஒரு காரும் வந்து சென்றது பதிவாகியுள்ளது. கந்தன் உடல் கிடந்த பாதாள சாக்கடை அருகே எந்தவித ரத்த கறையும் இல்லை. இதனால் அவரை வேறு இடத்தில் வைத்து கொன்று விட்டு, உடலை இங்கு வீசி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.