கிராம உதவியாளர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கிராம உதவியாளர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 மற்றும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.
பொங்கல் போனஸ்
2019-ம் ஆண்டு பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரத்து 500 என அனைத்து கிராம உதவியாளருக்கும் வழங்க வேண்டும். நில அளவைத்துறையில் காலியாக உள்ள புல உதவியாளர், செயின்மேன் போன்ற பணி இடங்களில் கிராம உதவியாளர்களை நியமிக்க வேண்டும். வருகிற 4-ந்தேதி சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில அளவிலான நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.