ஓட்டப்பிடாரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ஓட்டப்பிடாரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஓட்டப்பிடாரம்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளத்தை சேர்ந்தவர் சுடலைமணி மகன் வேல்முருகன் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டப்பிடாரம் வ.உ.சி. காலனியை சேர்ந்த விஜயபாண்டி என்பவர் வீட்டில் மின் இணைப்பை பழுது பார்த்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வேல்முருகன் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேல்முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.