பாலின சமத்துவமும்.. பெண்களின் முன்னேற்றமும்..
பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.
பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. ஆனாலும் உலக அளவில் இருபாலரிடையே சம உரிமை நிலைநாட்டப்படுவதில் சீரற்ற தன்மையே நிலவுகிறது. இந்த நிலையில் உலக பொருளாதார கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் ஆசியாவில் பாலின சமத்துவத்தை பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்களிப்பு, அரசியல் அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் அமைந்திருக் கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண் - பெண் இடையேயான பாலின இடைவெளி 79 சத வீதம் வரை களையப்பட்டு இருப்பதாகவும், பெண்கள் கல்வியில் சாதனை படைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளையில் தெற்கு ஆசிய நாடுகளின் பட்டியலில் வங்காள தேசம் முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆண்-பெண் இடையேயான பாலின இடைவெளி 72 சதவீதம் குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாடு பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருந்தாலும் உலக அளவில் 108-வது இடத்தில்தான் இருக்கிறது. மற்ற ஆசிய நாடுகளான இலங்கை (100-வது இடம்), நேபாளம் (105), மாலத்தீவு (113), பூட்டான் (122) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. 149 நாடுகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் பாகிஸ்தான் மிகவும் பின் தங்கிய நிலையில் (148) இருக்கிறது.
உலக அளவில் பாலின சமநிலையை கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் முறையே அடுத் தடுத்த இடங்களில் இருக்கின்றன. இங்கிலாந்து 15-வது இடத்திலும், கனடா 16-வது இடத்திலும், அமெரிக்கா 51-வது இடத்திலும், சீனா 103-வது இடத்திலும், ஜப்பான் 110-வது இடத்திலும், கொரியா 115-வது இடத்திலும், துருக்கி 130-வது இடத்திலும், சவுதி அரேபியா 141-வது இடத்திலும் இருக்கின்றன. ஏமன் கடைசி இடத்தில் இருக்கிறது.
பல நாடுகளில் பெண்கள் தொழில்துறையில் ஆண்களுக்கு இணையாக உயர் பதவியில் இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் முக்கிய பங்களிப்பு வழங்கி வருகிறார்கள். ஆண் - பெண் தொழிலாளர் களிடையே ஊதியத்தில் இருந்துவந்த முரண்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்பட்டிருக்கிறது.