அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.4¼ கோடியில் வகுப்பறை, ஆய்வக கட்டிடம் திறப்பு
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் உயர்கல்வித்துறையின் சார்பில் ரூ.4 கோடியே 24 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வக கட்டிடத்தினை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரியலூர்,
அப்போது கல்லூரியில் நடந்த விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். பின்னர் கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் புதிதாக திறக்கப்பட்ட கல்லூரி கட்டிடத்தினை பார்வையிட்டனர்.
இதில் கல்லூரியின் முதல்வர் பழனிசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (திருச்சி கோட்டம்) ஜெயக்குமார், உதவி பேராசிரியர் அருள், இணை பேராசிரியர் ராசமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.