கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்,
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட குழு கூட்டம் நேற்று பெரம்பலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வரதராஜன், பொருளாளர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும்.
மத்திய- மாநில அரசுகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் விலை வழங்கிட வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய எஸ்.ஏ.பி. கரும்பு பாக்கி ரூ.220 கோடியையும் தனியார் ஆலைகள் 2013-14 முதல் 2016-17 வரை நான்கு ஆண்டுகளுக்கு தரவேண்டிய எஸ்.ஏ.பி. கரும்பு பண பாக்கி ரூ.ஆயிரத்து 217 கோடியையும், 10 தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கடந்த ஆண்டு எப்.ஆர்.பி. கரும்பு பாக்கி ரூ.200 கோடியையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.
கரும்பு வெட்டும் கூலி அதிகரித்து விவசாயிகள் சிரமப் படும் நிலையில் வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் வருகிற 4-ந் தேதி நடைபெறவுள்ள காத்திருப்பு போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரும்பு விவசாயிகள் துரைசாமி, காமராஜ், விநாயகம், கருப்புடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.