ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழிப்பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான 25-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று முன்தினம் (27-ந் தேதி) நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது.
நம்மாழ்வார் பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் வெள்ளை உடை உடுத்தி பன்னிருநாமமும், துளசி மாலையும் தரிசித்து காட்சியளித்தார். அதன்பின் நம்மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை உச்சரித்தவாறு நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். பின்னர் நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை காண்பித்து நம்மாழ்வார் மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர்.
அதன் பின் காலை 8 மணிமுதல் 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். இதனை தொடர்ந்து நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அதன்பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று(29-ந்தேதி) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதன்பின் அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றமறை நடைபெற்றது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றத்தை தொடர்ந்து, இன்று (29-ந்தேதி) முதல் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வரும் 7-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த உற்சவம் பகல் பத்து 5 நாட்களும், ராப்பத்து 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ஸ்ரீரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் 3-ந் தேதி தொடங்கி வரும் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
11 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
பரமபதவாசல் திறக்கப்பட்ட முதல்நாள் பெருமாள் மூலஸ்தானம் செல்லும் வரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 196 பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர். 2-ம் நாளான 19-ந் தேதி 56 ஆயிரத்து 972 பேரும், 3-ம் நாளில் 77 ஆயிரத்து 976 பேரும், 4-ம் நாளில் 83 ஆயிரத்து 129 பேரும், 5-ம் நாளில் 92 ஆயிரத்து 60 பேரும், 6-ம் நாளில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 288 பேரும், 7-ம் நாளில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 102 பேரும் சொர்க்கவாசல் வழியாக வந்து நம்பெருமாளை தரிசித்தனர். 8-ம் நாளான (25-ந் தேதி)திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியின்போது, பரமபதவாசல் திறப்பு கிடையாது. இருப்பினும் 82 ஆயிரத்து 876 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். 9-ம் நாளில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 982 பேரும், 10-ம் நாளான நேற்று முன்தினம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 303 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 10 நாட்களில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 884 பக்தர்கள் நம்பெருமானை தரிசித்துள்ளனர்.