நாகையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகள் - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
நாகையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஆகும்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. மேலும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக நாகை விளங்குகிறது. இதனால் நாகைக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர். நாகை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகை-நாகூர் மெயின்ரோடு ஆகிய சாலைகளில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இந்த பகுதிகளில் இருசக்கர வாகனங்கள், கார், ஷேர் ஆட்டோ, பள்ளி வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்டவை தினமும் சென்று வருகின்றன.
அதிலும் குறிப்பாக மேற்கண்ட சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்தநிலையில் நாகை புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், பப்ளிக் ஆபீஸ்ரோடு, நாகை - நாகூர் சாலைகளில் மாடுகளின் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மேலும் புதிய பஸ் நிலையம் அருகே சாலையில் மாடுகள் படுத்து கொள்வதால், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன.
ஆதலால் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கவும், மாடுகளை சாலைகளில் திரிய விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஆகும்.