தூத்துக்குடியில் எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் எல்.ஐ.சி. முகவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் எல்.ஐ.சி. முகவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தூத்துக்குடி கிளை எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
பாலிசி போனஸ் உயர்த்தப்பட வேண்டும். பிரிமியத்திற்கான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். பாலிசி புதுப்பிக்கும் காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். பாலிசி கடன் வட்டியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோஷம்
ஆர்ப்பாட்டத்துக்கு எல்.ஐ.சி. முகவர்கள் சங்க தலைவர் ராபின்சன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தாமரை கண்ணன், சின்னகுருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.