ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி ஓட்டல்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்த கூடாது நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள ஓட்டல்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி,
உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை உழவர்கரை எல்லைக்குட்பட்ட எந்த பகுதியிலும் அல்லது ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் இதர ஓட்டல்களிலும் ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்த கூடாது.
நடன நிகழ்ச்சிகளை தவிர்த்து வேறு கேளிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்கு, பொழுதுபோக்கு இடமாக பயன்படுத்த இருப்பின் புதுச்சேரி நகராட்சிகள் (பொதுமக்கள் பொழுது போக்குக்குரிய இடங்கள் மற்றும் கேளிக்கை) விதிகள் 1980-ன்படி நகராட்சி இடமிருந்து உரிமம் பெற்று நடத்த வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் நடத்துவது புதுச்சேரி நகராட்சி விதிகள் சட்டம் 1973-ன்படி குற்றமாகும்.
புத்தாண்டு நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கண்டிப்பாக நகராட்சிகள் சட்டம் 1973-ன்படி ஒவ்வொரு நுழைவு கட்டணத்திற்கும் 25 சதவீதம் கேளிக்கை வரியாக செலுத்த வேண்டும்.
உரிமம் பெறாமலோ மற்றும் உரிமம் பெற்று கேளிக்கை வரி செலுத்தாமலோ இருந்தால் நிகழ்ச்சியை ரத்து செய்வது மட்டுமல்லாமல் புதுச்சேரி நகராட்சி சட்டத்தின் கீழ் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.