மேகதாது அணை விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து நெற்றியில் பட்டை போட்டு அரைநிர்வாண ஆர்ப்பாட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நடத்தினர்
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர், நெற்றியில் பட்டை போட்டு அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ள கர்நாடக அரசையும், அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்த மத்திய அரசை கண்டித் தும் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் பட்டாபிராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ரஜினிபாண்டியன்(திருவாரூர் தெற்கு), ராஜா(நாகை வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் இமான் சேகர், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் ஆரோக்கிய செல்வம், அவைத்தலைவர் பாண்டியன், நகர செயலாளர் பாவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேல் சட்டை இன்றி அரை நிர்வாணத்துடன், நெற்றில் பட்டை போட்டு மேகதாதுவில் அணை கட்ட கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.