‘நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்’ போலீசாருக்கு, ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை
பழனி சப்-கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும்படி போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
பழனி,
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் குழுவினர், அவ்வப்போது மாவட்டங்களில் உள்ள கோர்ட்டு, சப்-கோர்ட்டுகளில் ஆய்வு நடத்துவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி சப்-கோர்ட்டில் நேற்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பழனி சப்-கோர்ட்டுகளில் பராமரிக் கப்படும் வழக்குகள் குறித்த ஆவணங்களை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார். அப்போது எந்தெந்த வழக்குகள் முடியும் தருவாயில் இருக் கின்றன. எந்தெந்த வழக்கு களில் சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட இருக்கிறது என கோர்ட்டு ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் கோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள், பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் அவர்கள் தொடர்பான ஆவணங்களையும் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார். அதையடுத்து மதியம் 2 மணிக்கு மேல் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் போலீசார் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தாமல் உள்ள சாட்சிகள் குறித்த விவரங் களை ஐகோர்ட்டு நீதிபதி கேட்டறிந்தார். தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர், கூடுதல் மாவட்ட நீதிபதி மதுரசேகரன், பழனி கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்திசெழியன், சார்பு நீதிபதி கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.