புஷ்பவனத்தில் கடல் சேறு அகற்றும் பணி - கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு

புஷ்பவனத்தில் கடல் சேறு அகற்றும் பணியை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-12-25 22:15 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மற்றும் ஊருக்குள் புகுந்த கடல் சேற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகளை விரைந்து முடித்து, கடற்கரையை பொதுமக்களும், மீனவர்களும் பயன்படுத்தும் வண்ணம் சீரமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின் போது வேதாரண்யம் வட்டார வளர்சி அலுவலர் தியகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வேதாரண்யம் தாசில்தார் இளங்கோ உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்