ரபேல், பயிர்க்காப்பீட்டில் ஊழல் குற்றச்சாட்டு: உங்களுடன் ஏன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும்? உத்தவ் தாக்கரே கேள்வி
ஊழல் குற்றச்சாட்டு உள்ள உங்களுடன் நாங்கள் ஏன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும் என்று பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.
மும்பை,
சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் நேற்று சிவசேனா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது ஆளும் கூட்டணி கட்சியான பா.ஜனதாவை அயோத்தி ராமர் கோவில் விவகாரம், ரபேல் போர் விமான ஊழல், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றில் கடுமையாக சாடினார்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று கடந்த தேர்தலின் போது அக்கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால் அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த பிரச்சினை தொடர்பாக நான் அயோத்தி சென்று இருந்தேன். தற்போது கோவில் நகரமான இங்கு (பண்டர்பூர்) வந்துள்ளேன். ராமர்கோவில் பிரச்சினையில் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் மத்திய அரசை எழுப்ப இங்கு வந்து இருக்கிறேன்.
இனி பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி செல்ல உள்ளேன்.
ரபேல் போர் விமான ஊழல் பெரும் சர்ச்சைக்காக பேசப்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு நற்சான்று வழங்கி விட்டது. இது எப்படி என்று தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க ராணுவ வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க மோடி அரசு மறுக்கிறது.
விவசாயிகளுக்கு மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டம் பலன் அளிக்கவில்லை. பயிர்க்காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு நிறுவனங்கள் இருந்தபோதிலும், 12 தனியார் நிறுவனங்கள் வசம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த தனியார் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆதாயம் அடைந்து உள்ளது.
இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் உங்களுடன் நாங்கள் ஏன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும்?.
எனது சுற்றுப்பயணத்தின் போது எலுமிச்சை விவசாயி ஒருவர் அவரது வேதனையை தெரிவித்தார்.
அப்போது, காலம் மாறிவிட்டது, பாதுகாவலர்கள் திருடர்களாக மாறி விட்டனர். என்ன செய்ய முடியும் என்று அவரிடம் ஆறுதல் கூறினேன். (2014 தேர்தல் பிரசாரத்தின் போது, ‘திருடர்களிடம் இருந்து மக்களை காப்போம்’ என்று மோடி கூறியதை உத்தவ் தாக்கரே இவ்வாறு சாடினார்).
பா.ஜனதாவினர் தங்களை உலக வெற்றியாளர்களாக கருதினர். ஆனால் 5 மாநில தேர்தல்களில் சிதறி போய் விட்டனர். மிசோரம், தெலுங்கானா மாநில தேர்தல்களில் தேசிய கட்சிகளை புறக்கணித்து வாக்காளர்கள் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளனர். வலுவான பிராந்திய கட்சிகளை மக்கள் தேர்வு செய்துள்ளனர். இதே நிலை மராட்டியத்தில் உருவாகும். இந்தி பேசும் 3 மாநிலங்களிலும் பா.ஜனதா மீது மக்கள் வெறுப்பு அடைந்து இருப்பதால் அக்கட்சியை நிராகரித்து விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.