‘திருநங்கை குழந்தை பெற்றாலும் டெம்பு நீர்ப்பாசன திட்டம் நிறைவு பெறாது’ : நிதின் கட்காரி பேச்சு
திருநங்கை குழந்தை பெற்றாலும் டெம்பு நீர்ப்பாசன திட்டம் நிறைவு பெறாது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் வறட்சியை சந்தித்து வரும் சத்தாரா, சாங்கிலி, சோலாப்பூர் மாவட்டங்களில் விவசாய பரப்பை அதிகரிக்க கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் வகையில் டெம்பு நீர்ப்பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் 1996-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. இன்னும் திட்ட பணிகள் முழுமைப்பெறவில்லை. இதில் 4-ம் கட்ட பணிகள் நிறைவு பெற்று உள்ளது. 5-ம் கட்ட பணிகள் விரைவில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சாங்கிலியில் நடந்த டெம்பு நீர்ப்பாசன திட்டத்தின் 4-ம் கட்ட நிறைவு விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், டெம்பு நீர்ப்பாசன திட்டம் இழுத்தடிக்கப்படுவதை நகைச்சுவையாக கூறினார்.
இதுகுறித்து அவர், “டெம்பு நீர்ப்பாசன திட்டம் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமமானது. திருநங்கை குழந்தை பெற்றாலும், இந்த நீர்ப்பாசன திட்ட பணிகள் மட்டும் நிறைவு பெறாது என்று நான் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கூறியிருந்தேன். அது எனது நினைவுக்கு வருகிறது” என்றார்.
பா.ஜனதாவில் சிலர் அதிகம் பேசுவதால் அவர்களது வாயில் துணியை சுற்ற வேண்டும் என்று கூறி கலகலப்பையும் ஏற்படுத்திய நிதின் கட்காரி, 5 மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பா.ஜனதா தலைமை தான் பொறுப்பு என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். தற்போது நீர்ப்பாசன திட்ட தாமதம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.