நினைவு தினத்தையொட்டி பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

நினைவு தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பெரியார்-எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2018-12-24 22:39 GMT
அரியலூர்,

பெரியார், எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட .தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலையில் அக்கட்சியினர் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துடன் மவுன ஊர்வலமாக காமராஜர் திடலில் இருந்து புறப்பட்டு சத்திரம், எம்.பி.கோவில் தெரு, தேரடி, மார்க்கெட் தெரு வழியாக அரியலூர் பஸ் நிலையம் அருகே வந்தனர். பின்னர் அங்குள்ள பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதேபோல் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில், அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக புறப்பட்டு சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் திருமானூர், மீன்சுருட்டி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி நேற்று ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தின் மண்டல தலைவர் காமராஜ் தலைமையில், அக்கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி எடுத்து கொண்டனர். திருமானூர் அருகே உள்ள அண்ணிமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அரியலூர் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தனபால் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்