உத்தமபாளையம் அருகே கல்லூரி துணை முதல்வர் தற்கொலை

உத்தமபாளையம் அருகே கல்லூரி துணை முதல்வர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-24 22:00 GMT
உத்தமபாளையம்,

சிவகங்கையை சேர்ந்தவர் சேவியர் (வயது 62). இவர், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் தனியார் கல்வியியல் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வந்தார். இதற்காக கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் அவர் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை அவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ராயப்பன்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து அறைக் குள் சென்று பார்த்தனர்.

அப்போது அங்குள்ள அறையில் சேவியர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் துணை முதல்வர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்