70 அடி உயர நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து குதித்து நெல் வியாபாரி தற்கொலை சேத்துப்பட்டில் பரிதாபம்

சேத்துப்பட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து கீழே குதித்து நெல் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-24 22:45 GMT

சேத்துப்பட்டு, 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள நல்ல தண்ணீர் குளம் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 45). இவர் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சிவசங்கரி (வயது 34). இவர்களுக்கு மதுமிதா (16), லட்சணா (11) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

கன்னியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மதுவை மறக்க மறுவாழ்வு மையத்தில் அவரை சேர்த்து விட முடிவு செய்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த கன்னியப்பன் வீட்டின் அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 70 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஏறிச்சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நரசிம்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கன்னியப்பன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்